2025 மே 05, திங்கட்கிழமை

கரை ஒதுங்கிய சிவப்பு நிற டொல்பின் மீன்

Princiya Dixci   / 2021 ஜூன் 24 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கல்முனை, பாண்டிருப்புக்  கடற்கரையில் இறந்த நிலையில் சிவப்பு நிற டொல்பின் மீன் ஒன்று, நேற்று (23)   கரையொதுங்கியுள்ளது.

சுமார் 4 முதல் 5 அடி வரையான  நீளமான இந்த டொல்பினை, மீனவர்கள் கண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இவ்விடத்துக்கு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி, கடற்றொழில் திணைக்கள உத்தியோகத்தர்,  பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மற்றும் பொலிஸார் வருகை தந்து, பகுப்பாய்வுக்காக டொல்பினின் உடலைக் கொண்டு சென்றுள்ளனர்.

கிழக்கு மாகாணக் கரையோரங்களில் கடந்த ஒரு வாரமாக இறந்த ஆமைகள் மற்றும் டொல்பின்கள் கரையொதுங்கி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X