2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கரையொதுங்கிய கடலாமை

Editorial   / 2021 டிசெம்பர் 30 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

அம்பாறை, நிந்தவூர்   கடற்கரையில் உயிருடன் கடலாமை ஒன்று , நேற்றிரவு (29) கரையொதுங்கியுள்ளது.

சுமார் 150 கிலோகிராம் எடை கொண்ட சுமார் 3 அடியுடைய கடலாமை ஒன்றே கரையொதிங்கியுள்ளதாக நிந்தவூர், வெளவால் ஓடை மீனவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட  கடற்றொழில் திணைக்கள உத்தியோகர்கள்,  பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மற்றும் பொலிஸாருக்கு, மீனவர்களால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

கல்முனை  பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரியநீலாவணை, பாண்டிருப்பு  கடற்கரை பகுதியில்  கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடலாமைகள் உயிருடன்  கரையொதுங்கியிருந்தன.

இது தவிர, இலங்கை  கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய பின்னர் அம்பாறை  மாவட்ட கடற்கரை ஓரங்களில் தொடர்ச்சியாக  கடல்வாழ் உயிரினங்கள் மேற்கூறிய கடற்கரை பகுதியில் எரிகாயங்களுடன் இறந்த நிலையில்  மீட்கப்பட்டு வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X