2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கரைவாகு வடக்கு நகரசபை: இன நல்லுறவு கட்டியெழுப்புமா?

பி.எம்.எம்.ஏ.காதர்   / 2017 நவம்பர் 09 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம், தமிழ் மக்களின் நல்லுறவை அடிப்படையாகக் கொண்டு இன ஐக்கியம் மற்றும் நல்லுறவை வளர்க்கும் நோக்கில் புதிய “கரைவாகு வடக்கு நகரசபை” அமைய வேண்டும் என்று, மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் முன்மொழிந்துள்ளது.

இந்த முன்மொழிவை, சம்மேளனத்தின் தலைவா் அஷ்ஷெய்க்  எம்.ஐ.ஹுசைனுதீன்(ரியாழி) தலைமையில் சென்ற குழுவினர் அம்பாறை மாவட்ட செயலாளர் துஸித பி வணிகசிங்கவிடம் நேற்று (08) கையளித்தனர்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களைத் தரம் உயர்த்துதல் மற்றும் ஸ்தாபித்தல் தொடா்பான முன்மொழிவுகளை முன்வைக்குமாறு அரசாங்கம் கோரியுள்ளமைக்கு அமைவாகவே,  புதிய “கரைவாகு வடக்கு நகர சபை”  கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

புதிய “கரைவாகு வடக்கு நகர சபை” யின் எல்லைகள் , சனத்தொகைள் மற்றும் இன நல்லுறவு தொடா்பான விடயங்களும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.

முன்மெழியப்பட்டுள்ள கோரிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,

முதலாவது தெரிவாக, மருதமுனை ,பெரியநீலாவணை போன்ற கிராமங்கள்  இணைந்த நிலத்தொடர்புடனான 25,924 சனத்தொகையை கொண்ட (முஸ்லிம்கள் – 19,773, தமிழ்மக்கள் – 6,000 ), “கரைவாகு வடக்கு நகரசபை” என அமையும். இதில் மொத்தம் 05 வட்டாரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில்,  தமிழ் மக்களுக்கு ஒரு வட்டாரம், முஸ்லிம்களுக்கு 04 வட்டாரம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


இரண்டாவது தெரிவாக, 1987ஆம் ஆண்டக்கு முன்னர் நடைமுறையிலிருந்த பெரியநீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு போன்ற கிராமங்களை உள்ளடக்கியதான பழைய கரைவாகு வடக்கு நகரசபை. இதில் மொத்தம் - 34,639 சனத்தொகை உள்ளடக்கப்பட்டுள்ளது.  (முஸ்லிம்கள் -19,773 பேரும் தமிழ்மக்கள்- 14 ,675 பேரும் உள்ளனர்) இதன்படி மொத்தம் 07 வட்டாரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ் மக்களுக்கு 03 வட்டாரம்கள் , முஸ்லிம்களுக்கு 04 வட்டாரம்கள் எனவும் இந்த முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கரைவாகு வடக்கு நகரசபை”  சகல இன மக்களையும் ஒன்றினைத்து  முன்மொழியப்பட்டுள்ளதை மாவட்ட அரசாங்க அதிபர் பாராட்டிப் பேசியதோடு, எதிர்காலத்தில் இந்தப் பிரதேசத்தின் இன நல்லிணக்கத்துக்கு இது எடுத்துக்காட்டாகும் எனப் பலரும் பாராட்டியுள்ளனர். இதனையே மருதமுனை மக்களும் எதிர்பார்ப்பதாக சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தக் குழுவில் சம்மேளனத்தின் நிர்வாகத்தினர், சிரேஷ்ட சட்டத்தரணிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள்,சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் சார்ந்த முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .