Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
திறன் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழிற்பயிற்சி அமைச்சின் கீழியங்கும் தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தினால், தொழில்நுட்பவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடத்தப்படும் கற்கைநெறிகளுக்கு 2016ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்;களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள 39 தொழில்நுட்பவியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு முழுநேர, பகுதிநேர தமிழ் மற்றும் சிங்களமொழி மூலக்; கற்கைநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கணினி, ஆங்கிலம், மேசன், தச்சுத்தொழில், தட்டச்சு, மின்னியல், உயர்கணக்கியல் மற்றும் தொழில்நுட்பவியல், வியாபார முகாமைத்துவம், வாகனம் திருத்துதல், வீட்டு மின்னிணைப்பு போன்ற கற்கைநெறிகளுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கற்கைநெறிகளை பயில விரும்பும் இளைஞர், யுவதிகள் விண்ணப்பங்களை அந்தந்த பிரதேசங்களிலுள்ள உரிய தொழில்நுட்பவியல் கல்லூரி அல்லது தொழில்நுட்பக்கல்லூரியின்; பணிப்பாளருக்கு அல்லது அதிபர்களுக்கு எதிர்;வரும் 30ஆம் திகதிக்கு முன்னராக பதிவுத் தபாலில் அனுப்பிவைக்க முடியுமென தொழில்நுட்பக் கல்விப் பயிற்சித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.ஏ.ரஞ்ஜித் தெரிவித்தார்.
7 minute ago
31 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
31 minute ago
2 hours ago
2 hours ago