2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கற்றாழைச் செய்கையாளர்கள் ஊக்குவிப்பு

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ், எம்.எஸ்.எம். ஹனீபா

நாட்டில் வறுமையை ஒழிக்கும் ஜனாதிபதியின் எண்ணக்கருவின் கீழ், கிராமங்கள் தோறும் பல்வேறு சுயதொழில் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இவ்வேலைத் திட்டத்துக்கு அமைவாக, கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துடன் இணைந்து, விவசாயத் திணைக்களத்தின் மூலம் பசுமைப் பொருளாதாரப் புரட்சி மேம்பாட்டுச் செயற்றிட்டம், அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

அம்பாறை மாவட்டத்தில் சுயதொழில் வாய்ப்புகளை, கற்றாழைச் செய்கை மூலமாகக் கட்டியெழுப்பும் வகையில், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஒலுவில், பாலமுனை, திராய்க்கேணி,  அட்டாளைச்சேனை ஆகிய கிராமங்களில், தெரிவுசெய்யப்பட்ட 180 குடும்பங்களுக்கு, கற்றாழை நாற்றுகளை வழங்கி வைக்கும் திட்டத்தின் முதற்கட்ட நிகழ்வு, அட்டாளைச்சேனை விவசாய விரிவாக்கல் நிலையத்தில் இன்று (06) நடைபெற்றது. 

நிலையத்துக்குப் பொறுப்பான விவசாயப் போதனாசிரியர் ஏ.எச்.ஏ.முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண திட்டப் பணிப்பாளர் ஏ.அலியார் ஆசாத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, நாற்றுகளை வழங்கி வைத்தார். 

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள தெரிவுசெய்யப்பட்ட 25 குடும்பங்களைச் சேர்ந்த சமுர்த்திப் பயனாளிகளுக்கு கற்றாழை நாற்றுகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டதுடன், கற்றாழைச் செய்கை தொடர்பான பயிற்சிகளும் அளிக்கப்பட்டதுடன், தொற்று நீக்கிப் பொதிகளும் கையளிக்கப்பட்டன. 

கற்றாழைச் செய்கையில் ஈடுபடுபவர்கள், சந்தைப்படுத்தல் மூலம், மாதாந்தம் சுமார் 25 ஆயிரம் ரூபாய் வருமானத்தை ஈட்டக்கூடிய வாய்ப்பு உள்ளதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X