2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கல்முனையில் சேதமடைந்த கட்டடங்களை அகற்றும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 29 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

அம்பாறை, கல்முனைக்குடிக் கடற்கரை வீதியின் கிழக்குப் புறமாக 65 மீற்றருக்கு உட்பட்ட  பகுதியில் சுனாமி அனர்த்தத்தால்; சேதமடைந்த கட்டடங்கள் இடித்து அகற்றும் வேலைத்திட்டம் இன்று (29) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  
கல்முனை மாநகரசபை மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கல்முனையில் நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவாக இக்கடற்கரைச் சூழல் அமைந்துள்ளதாக  சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை கண்டறிந்துள்ளது.

இவ்வாறு சேதமடைந்த கட்டடங்களை அகற்றுவதன் மூலம் நுளம்புகள் உற்பத்தியாவது தவிர்க்கப்படுவதுடன், மதுபானம் மற்றும் போதைவஸ்துப் பாவனை உள்ளிட்ட குற்றச்செயல்கள் ஒழிக்கப்படுவதற்கும் வாய்ப்பாக அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X