2025 மே 02, வெள்ளிக்கிழமை

கல்முனையில் 424 டெங்கு நோயாளர்கள்

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் கடந்த மாதம் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 424 பேர்  அடையாளம் காணப்பட்டதாக அட்டாளைச்சேனைப் பிரதேச  சுகாதார வைத்திய அதிகாரி  ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.

இந்நிலையில், நிந்தவூரில் டெங்கு நோயாளர்கள் 151 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அட்டாளைச்சேனையில் டெங்கு நோயை ஒழிப்பது  தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நேற்று  (31) சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.  

டெங்கு நோய் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், அட்டாளைச்சேனையில் நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் வெற்றுக் காணிகளை  வைத்திருப்போருக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.  

அத்துடன்,  நுளம்புகள் பெருகக்கூடிய வகையில்  இடங்களை வைத்திருப்போருக்கு உடனடியாக அபராதம் விதிப்பதற்கு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

நுளம்புக் குடம்பிகளை அழிப்பதற்காக நீர் நிலைகளில் மீன் வளர்க்கும் திட்டம் கல்முனைப் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், புகை விசுறுதலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X