2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கல்முனையில் துரித அபிவிருத்தி

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யூ.எல்.மப்றூக், எம்.எஸ்.எம்.ஹனீபா

கல்முனை நகரை துரிதமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி அளித்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

துரித நகர அபிவிருத்தித்திட்டம் தொடர்பான கலந்துரையாடல், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்றது. இதன்போதே பிரதமர் மேற்படி வாக்குறுதியை அளித்துள்ளதாகவும் அவர் கூறினர்.  

பொதுத்தேர்தல் காலத்தில் கல்முனையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கல்முனை நகர அபிவிருத்தி தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை பிரதமரிடம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நினைவுபடுத்தினார். மேலும், கல்முனை துரித நகர அபிவிருத்தித்திட்டம் தொடர்பில் பல்வேறு தேவைகளையும் குறைபாடுகளையும் பிரதமரிடம் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், கல்முனை நகர அபிவிருத்தி தொடர்பான செயற்றிட்டத்தை எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04ஆம் திகதிக்கு முன்னர் தன்னிடம் கையளிக்குமாறு பிரதமர் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.  

கல்முனை துரித நகர அபிவிருத்தித்திட்டம், ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளது.   கல்முனை புதிய நகர அபிவிருத்தித்திட்டத்துக்காக உள்வாங்கப்படும் 800 ஏக்கர் சதுப்பு நிலத்தை எந்த சமூகத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மண்ணிட்டு நிரப்பி நகர அபிவிருத்தித்திட்டத்தை  முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X