Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜனவரி 19 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனைக் கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்குச் சம்பள நிலுவையை வழங்குவதற்கு இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இலங்கை மகா ஆசிரியர் சங்கத் தலைவர் ஏ.எம்.அஹுவர் தெரிவித்தார்.
இவ்வலயத்தில் சுமார் 2,400 ஆசிரியர்களுக்குச் சம்பள நிலுவை வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
சாய்ந்தமருதில் புதன்கிழமை (18) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, 'கல்முனை வலயப் பாடசாலைகளில் கடமை புரியும் இந்த ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவை வழங்கும் செயற்பாடு கவனிப்பாரற்று உள்ளது.
இப்பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரி கடந்த நவம்பர் 8ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோவுக்கு எமது சங்கத்தால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
உரிய நடவடிக்கையின் பொருட்டு மாகாண கல்விச் செயலாளர் ஊடாக மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதாக ஆளுநரால் எமக்கு அறிவிக்கப்பட்டது.
எனினும், இந்த ஆசிரியர்களுக்குச் சம்பள நிலுவையை வழங்குவதற்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரால் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமாயின், அது பற்றியும் எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்த ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஆளுநருக்குப்; புதன்கிழமை (18) மகஜர் அனுப்பியுள்ளோம்' என்றார்.
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago