2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கல்முனை மாநகர நிதியறிக்கை மக்கள் பார்வைக்கு

Princiya Dixci   / 2020 நவம்பர் 02 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான உத்தேச நிதியறிக்கை (பட்ஜெட்), பொது மக்களின் பார்வைக்காக இன்று  (02) முதல் வைக்கப்பட்டுள்ளதாக மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

கல்முனை பொது நூலக வளாகத்தில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த நிதியறிக்கையை, இம்மாதம் 09ஆம் திகதி வரை அலுவலக நேரத்தில் பார்வையிட முடியும் எனவும் நிதியறிக்கைத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பாக பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை, இம்மாதம் 12 ஆம் திகதி வரை எழுத்து மூலம் சமர்ப்பிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார். 

கல்முனை மாநகர சபையின் அடுத்த ஆண்டுக்கான நிதியறிக்கை, டிசெம்பர் மாதம் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் இதற்கான குழுக்கலந்துரையாடல்கள் தற்போது நடைபெற்று வருவதாகவும் மேயர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X