Princiya Dixci / 2020 நவம்பர் 05 , பி.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை நகரில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் வந்த ஹோட்டலொன்று மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
இங்கு கடமையாற்றிய பணியாளர்களின் சுயதனிமைப்படுத்தல் காலம் பூர்த்தியான பின்பு, கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்னரே, இந்த ஹோட்டல் மீண்டும் திறப்பதற்கு அனுமதிக்கப்படுமென, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.றிஸ்னி தெரிவித்தார்.
காத்தான்குடியைச் சேர்ந்த மேற்படி தொற்றாளர், சில தினங்களுக்கு முன்னர் கல்முனை நகருக்கு வருகைதந்து பஸ் நிலையப்பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலில் உணவருந்தியிருப்பதுடன், மற்றொரு வர்த்தக நிலையத்துக்கும் சென்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு, கரடியனாறு வைத்தியசாலையில் நேற்று (04) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் வழங்கிய தகவலையடுத்தே, பொதுச் சுகாதார பரிசோதகர்களால் குறித்த ஹோட்டலை இன்று (05) மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அங்கு பணியாற்றிய அனைவரையும் அடுத்த 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தலில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கல்முனை நகரில் தொற்றாளர் சென்றுவந்த வர்த்தக நிலையம் எது என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
8 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
22 Jan 2026