Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 22 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை - கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முகமாக 13 சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பிரதேசங்களில் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
இதன்படி, நீண்ட தூரம் செல்லும் வாகன சாரதிகள், சனநெரிசலாகக் காணப்படும் சந்தைத் தொகுதிகளிலுள்ள வியாபாரிகள், ஓட்டோ சாரதிகள், மீனவர்கள், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு எழுமாறாக ஒவ்வொரு சுகாதார வைத்தியதிகாரிப் பிரிவுகளிலும் நாளொன்றுக்கு 20 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இதேவேளை, மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள், நாளை (23) மீளத் திறக்கப்படுகின்றமையால் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களும், மாணவர்களும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, சமூக இடைவெளி என்பவற்றை பேண வேண்டுமெனவும் பொதுமக்கள் உதாசீனம் செய்யமால் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும், அவர் கேட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago