2025 மே 03, சனிக்கிழமை

கல்முனையில் மேலும் பல பகுதிகள் முடக்கம்

Kogilavani   / 2020 டிசெம்பர் 18 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், எஸ்.அஷ்ரப்கான், றாசிக் நபாயிஸ்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட கல்முனை சாஹிரா கல்லூரி வீதியில் இருந்து கல்முனை வாடி வீதி வரையில் உள்ள வீதிகள், சகல வர்த்தக நிலையங்கள், அரச தனியார் மற்றும் நிறுவனங்கள், கல்முனை சந்தை, கல்முனை பஸார் உட்பட பல பகுதிகள், இன்று(18) தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டதையடுத்து தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வெறிச்சோடிக்காணப்படுகின்றது.
இதன்போது இப்பிரதேசங்களில் இராணுவத்தினர் பொலிஸார் இணைந்து சுகாதார தரப்பினருடன் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் பொலிஸாருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் எழுமாற்றாக பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X