2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது

Princiya Dixci   / 2021 மே 26 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்ணொருவரை, 24 லீற்றர் கள்ளுடன் இன்று (26) கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, விநாயகபுரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றை, திருக்கோவில் பொலிஸ் நிலைய பெருங் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ. சமந்த தலைமையிலான பொலிஸார் முற்றுகையிட்டனர்.

இதன்போது, கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட 41 வயதுப் பெண்ணைக் கைது செய்ததுடன், அவரிடமிருந்து 3 கலன்களில் 24 லீற்றர் கள்ளை கைப்பற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .