Editorial / 2020 ஓகஸ்ட் 09 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது அல்ஹில்லால் வித்தியாலயத்தில், தரம் 6இல் கல்வி பயிலும் மாணவனான அஸிஸ் முஹமட் இக்றாம் எனும் மாணவன், காடை முட்டைகளை இயந்திரத்தின் ஊடாக குஞ்சு பொரிக்க வைக்கும் செயற்பாட்டில், ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றார்.
கொவிட் - 19 நெருக்கடியின்போது கிடைக்கப்பெற்ற விடுமுறை காலத்தைப் பயன்படுத்தியே, மக்களின் பாவனைக்குத் தேவையான இந்த இந்திரத்தை அவர் கண்டுபிடித்துள்ளார்.
தன்னுடைய தனிப்பட்ட முயற்சியால், மின்சாரத்தின் மூலம், எளிய முறையில் காடை குஞ்சு பொரிக்கும் இயந்திரத்தை இவர் கண்டுபிடித்துள்ளார். தன்னுடைய இந்தக் கண்டுபிடிப்புக்கு, தனது பெற்றோர், சகோதரர்கள், நண்பர் ஒருவர் பல உதவிகளைச் செய்து தந்ததாகக் கூறினார்.
இந்த இயந்திரத்தின் மூலம், ஒரே தடவையில் 50க்கும் அதிகமான காடை குஞ்சுகளை உற்பத்தி செய்ய முடியும் என்றும் எதிர்காலத்தில் பண்ணையொன்றை உருவாக்கி, பலருக்கு தொழில் வாய்ப்பை வழங்கவுள்ளதாகவும் அம்மாணவன் தெரிவித்தார்.

22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026