2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு

Editorial   / 2017 நவம்பர் 14 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். கார்த்திகேசு, அஸ்லம் எஸ்.மௌலானா, கனகராசா சரவணன், வி.சுகிர்தகுமார் 

அம்பாறை, திருக்கோவில் கடற்கரைப் பிரதேசத்தில் 17 வயதுடைய சஹாப்தீன் முகமட் அப்றின் என்ற மாணவனின் சடலம் கரையொதுங்கிய நிலையில், இன்று (14) காலை மீட்கப்பட்டுள்ளதென, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்

கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவன், கடந்த 11ஆம் திகதி  சாய்ந்தமருது கடற்கரைக்கு நண்பர்களுடன் நீராடச் சென்ற நிலையில் கடலில் மூழ்கிக்  காணாமல் போயிருந்த நிலையிலேயே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருக்கோவில் மயானத்த்துக்கு அருகிலுள்ள கடற்கரையில் சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதென, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .