2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

காணாமல் போன மீனவரின் சடலம் மீட்பு

பைஷல் இஸ்மாயில்   / 2017 டிசெம்பர் 09 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுவில் கடற்கரைப் பகுதியில், மீன்பிடிப் படகொண்டு கவிழ்ந்து காணாமல் போயிருந்த மீனவர் ஒருவரின் சடலத்தை, நேற்று (08) மீட்டதாக, அக்கறைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

மீன்பிடிக்கச் சென்று, கரையை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் போதே, பாரிய அலையொன்றில் சிக்கி, படகு கவிழ்ந்திருந்தது. இதன்போது,  படகை ஓட்டிச் சென்ற, ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 02 பிள்ளைகளின் தந்தையான அபுசாலி முகம்மது இப்றாஹிம் (39) என்பவர் காணாமல் போயிருந்தார்.

இவரைத் தேடும் பணியில், மீனவர்களும் கடற்படையினரும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ஒலுவில் வெளிச்ச வீட்டுக்கு முன்பாக, கடற்கரை பிரதேசத்தின் கற்பாறைக்குள் இருந்த சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பிரதேச பரிசோதனையின் பின்னர், சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .