2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு

Freelancer   / 2023 ஜூன் 14 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் பொது மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வரும் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட காணி நடமாடும் சேவை, பொத்துவில் பிரதேச செயலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை (13) நடைபெற்றது.

கிழக்கு மாகாண காணி ஆணையாளர் றுகான் தஸநாயக்க தலைமையில் நடைபெற்ற நடமாடும் சேவையில், பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொத்துவில், கோமாரி, அறுகம்பே மற்றும் செங்காமம் ஆகிய கிரமாங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் காணப்பட்ட காணிப் பிணக்குகளை குறித்த காணிகளுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு தெரிவு செய்யப்பட்ட 15 பிணக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட தலைமைக் காரியாலய காணி உத்தியோகத்தர் கே.எல்.எம். முஸம்மில் தெரிவித்தார்.

காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குதல், எல்லையிடல், காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணல், உரிமம் மாற்றம் செய்தல், காணி உறுதிக்கான விண்ணப்பம் செய்தல் போன்ற சுமார் பிரச்சினைகளுக்கு அதே இடத்தில் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், பொத்துவில், பாணமை, கோமாரி ஆகிய பிரதேசங்களில் நீண்ட காலமாக காணி உத்தரவுப்பத்திரம் வழங்கப்படாமல் இருந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பயனாளிகள் 50 பேருக்கு காணி உத்தரவுப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த நடமாடும் சேவையில் காணி உத்தியோகத்தர்கள் குடியேற்ற உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்கள போதனாசிரியர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X