Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தில் காணி விசேட மத்தியஸ்த சபையை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் தலைவர் பி. கைறுடீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று (03) மகஜரொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் பாரம்பரியமாக விவசாயம் மேற்கொள்ளப்பட்ட காணிகள் யுத்த காலத்தின் பின்னர் ஏனைய அபிவித்தித் திட்டங்களுக்கென எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
“குறித்த, விவசாயக் காணிகளை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க காணி விசேட மத்தியஸ்த சபையை, அம்பாறை மாவட்டத்தில் அமைப்பதால் தமிழ் பேசும் மக்கள் அவர்களது பிரச்சினைகளை இலகுவாக தீர்த்துக்கொள்ளவும், விரைவாக இதற்கான தீர்வைப் பெறவும் முடியும்” எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, ஏனைய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள விசேட காணி மத்தியஸ்த சபை போன்று அம்பாறை மாவட்டத்திலும் ஏற்படுத்துமாறும் அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
01 May 2025
01 May 2025