Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 ஓகஸ்ட் 19 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நொத்தாரிசு இல்லாதவர்களிடம் காணி உறுதிகளை எழுத வேண்டாமென சட்டத்தரணி சிவரஞ்சித் தெரிவித்தார்.
ஒலுவில், அஷ்ரப் நகர் பிரதேசத்தில் காணிகளை இழந்தோர்களுக்கான விழிப்புணர்வூட்டும் செயலமர்வும், சட்ட ஆலோசனையும், தேசிய மீனவர் பேரவையின் அனுசரனையுடன் அம்பாறை மாவட்ட மீனவர் பேரவையின் ஏற்பாட்டில், அஷ்ரப் நகர் அல்-அக்ஸா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை (19) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடந்து உரையாற்றுகையில்,
அம்பாறை மாவட்டத்தில் அதிகமான காணிப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. இப்பிரச்சினை தொடர்பாக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கம், அரச காணிகளை, “சுவர்ன பூமி”, “ஜய பூமி” போன்ற திட்டங்களில் பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது.காணிக் கச்சேரிகள் வைக்கப்பட்டு, அதனூடாகவே இக்காணிகள் வழங்கப்படுகின்றன.
ஒருவருடைய காணியை ஆட்சியென காண்பிப்தற்கு அக்காணிக்கு உரிய அத்தாட்சிப் பத்திரம் மற்றும் ஆவணங்கள் கட்டுமாணப் பணிகள் என்பன ஆதாரங்களாகும்.
ஒலுவில், அஷ்ரப் நகர் காஸான் கேணி பிரதேசத்தில் 1952ஆம் ஆண்டுக்கு முன்னர் எங்களது மூதாதையர்களால் காடு வெட்டி வாழ்ந்து வந்த காணிகளுக்கு 1980ஆம் ஆண்டு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தால்ல் காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இக்காணி அபகரிக்கப்பட்டு, தற்போது அங்கு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் வேறு நபர்களுக்கு வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.
சுமார் 63 ஏக்கர் ஹெக்டேயர் காணி அபகரிக்கப்பட்டுள்ளதால் அதில் வசித்து வந்த 59 குடும்பங்கள் கடந்த 5 வருடங்களாக வாழ்வதற்கு இடமில்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றோமென அவர்கள் சுட்டிக்காட்டினர்.
2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் இக் காணிகள் அளக்கப்பட்டு எல்லைக் கற்கள் போடப்பட்டிருந்தாகவும் தெரிவித்தனர்.
யானை வேலி நிர்மாணிப்பது என்ற போர்வையில் இக்கற்கள் அகற்றப்பட்டு எங்களது காணிகள் தற்போது வன இலாகா திணைக்களம் பொறுப்பேற்றுள்ளதாகவும் காணி இழந்தோர் தெரிவித்தனர்.
இக்கலந்துரையாடலில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவர்கள், காணிகளை இழந்தோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
5 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
23 minute ago