Editorial / 2024 மார்ச் 17 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச் ஹஸ்பர்
தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வைகைபுயல் வடிவேல் ஒரு படைத்தில், கிணற்றை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்தார். அந்த நகைச்சுவை வைரலாகியது. அதேபோன்ற சம்பவமொன்று கிழக்கில் இடம்பெற்றுள்ளது.
கிண்ணியா- தம்பலகாமம் பிரதான வீதியின் தம்பலகாமத்துக்கு அடுத்ததாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலமாக வைக்கப்பட்ட ‘கிண்ணியா’ எனும் பெயர் பலகையை பல மாதங்களாக காணவில்லை
சிவத்தப்பாலத்தடியில் நடப்பட்டிருந்த குறித்த பெயர்ப் பலகை இன்மையால், கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியை இனங்கண்டுக்கொள்வதில், வெளியில் இருந்து வரும் பாதசாரிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலமாக நடப்பட்ட குறித்த பெயர் பலகை பலமாத காலமாக காணாமல் போயுள்ளது.
இது தவிர புதிதாக அமைக்கப்பட்ட பல காபட் வீதிகளுக்கான முறையான பெயர் பலகையும் அமைக்கப்படவில்லை. இதனால், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பாதசாரிகள் வீதிகளை தேடியும் அங்கும் இங்கும் அலைகின்றனர். எனவே, இது தொடர்பில் உரிய சபை நடவடிக்கை எடுத்து வீதிகளுக்கான பெயர் பலகைகளை நடுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
8 hours ago
8 hours ago
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
14 Nov 2025
14 Nov 2025