2025 மே 01, வியாழக்கிழமை

கிருமிநாசினி விசிறிய விவசாயி மரணம்

Editorial   / 2018 ஜனவரி 09 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் கமநலசேவைப் பிரிவுக்குட்பட்ட விலாங்காட்டு வட்டையில் இன்று (09) காலையில் வேளாண்மைக்குக் கிருமிநாசினி விசிறிக்கொண்டிருந்த போது மயக்கமுற்று விவசாயி ஒருவர், மரணமடைந்துள்ளாரென, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த கந்தையா தங்கராசா (வயது 59) எனும் விவசாயியே, மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

மேற்படி விவசாயின் மரணம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலத்தை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.பீற்றர் போல் பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்கும் உத்தரவு பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .