Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ், சகா, எம்.எஸ்.எம். ஹனீபா, அஸ்லம் எஸ்.மௌலானா, ரீகே.றஹ்மத்துல்லா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிழக்கு மாகாணத்தில் இதுவரை 577 பேருக்கு கொரோனா வைர் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளார் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று (13) காலை 10 மணிக்கு முடிவடைந்த 12 மணித்தியலத்தில் 37 பேர் புதிய தொற்றாளர்களாக உறுதிப்படுத்ததையடுத்து, மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 577 ஆக உயர்வடைந்துள்ளது.
பலியகொட கொத்தணியில் மட்டக்களப்பில் 97 பேரும் திருகோணமலையில் 18 பேரும் கல்முனையில் 419 பேரும் அம்பாறையில் 20 பேரும் கொரோனா வைரஸ் தொற்றில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவற்றுக்கு மேலதிகமாக, மினுவான்கொட கொத்தணியுடன் தொடர்புடைய 4 பேரும், கந்தகாடு தொடர்புடைய 5 பேரும், வெலிசறை கடற்படையுடன் தொடர்புடைய 11 பேரும், வெளிநாட்டிலிருந்து வந்த 3 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா வைரஸ் நோயாளி ஒருவர், முல்லேரியா ஐடிஎச் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். சம்மாந்துறையை சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். இதுவே கிழக்கு மாகாணத்தில் கொரோனாவா ஏற்பட்டுள்ள முதலாவது மரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கிழக்கில் 20,113 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றுள் அக்கரைப்பற்று கொத்தணிப் பகுதியில் மட்டும் 9,008 பிசிஆர், அன்ரிஜன்ற் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
கல்முனைப் பிராந்தியத்தில் 10,827 சோதனைகளும் மட்டக்களப்பில் 6,619 சோதனைகளும் அம்பாறையில் 2,113 சோதனைகளும் திருகோணமலையில் 1,544 சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago