2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆளுநர் வாக்குறுதி

Editorial   / 2017 நவம்பர் 03 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்  -  

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுடன், இடம்பெற்ற சந்திப்பு வெற்றியளித்துள்ளதாக அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ், முஸ்லிம் பட்டதாரிகள் அமைப்பின் செயலாளர் கே.சுரேஸ்குமார் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு கடந்த புதன்கிழமை (01) கிழக்கு மாகாண ஆளுனர்  அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்த்தன பிரதிச்செயலாளர் எஸ்.முரளிதரன் உள்ளிட்ட கல்வி உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது, 156 நாட்களுக்கும் மேலாக போராட்தத்தில் ஈடுபட்ட  பலருக்கு நேர்முக அழைப்புக்கடிதங்கள் கிடைக்கப்பெறவில்லை எனவும் 2468 பட்டதாரிகளுக்கும் நேர்முகப்பரீட்சைக் கடிதங்கள் அனுப்பப்படவேண்டும் என்றும் இதில் 35 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகளை பட்டம்பெற்ற ஆண்டு அடிப்படையில் தேர்வு நடத்தி அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி உள்ளீர்க்க ஆவணசெய்யவேண்டும் என்ற வேண்டுகோளை கிழக்கு மாகாண ஆளுநரிடம் முன்வைத்ததாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் பதிலளிக்கையில்,

அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ் முஸ்லிம் பட்டதாரிகளின் பிரச்சினைகளை நான் நன்கறிவேன். 

போட்டிப்பரீட்சையில் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 2868 பேர் நேர்முகப் பரீட்சைக்காக  அழைக்கப்படவுனர் எனவும், இதில் 1440 பேரை முதலில் நியமிக்கப்படள்ளதாகவும் இதில் 300 சிங்களமொழிமூல பட்டதாரிகளும், 1100 தமிழ்மொழி மூல பட்டதாரிகளும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

மீதமாகவுள்ள 1468 பட்டதாரிகளுக்கு அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்று அதனை வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் உறுதியளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .