2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கிழக்கு மாகாணத்துக்கு மஹிந்த விஜயம்

பைஷல் இஸ்மாயில்   / 2018 ஜனவரி 23 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கிழக்கு மாகாணத்துக்கான விஜயமொன்றை, இம்மாதம் மேற்கொள்ளவுள்ளாரென, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் பீ.எச்.பியசேன, நேற்று (22) தெரிவித்தார்.

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கும், அம்பாறை மாவட்டம், அம்பாறை நகரத்தில் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே இந்த விஜயத்தை அவர் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த இரு தினங்களிலும் மாலை 4  மணியளவில் கூட்டங்களில் கலந்துகொண்டு, அவரின் எதிர்கால அரசியல் தொடர்பான மிக விரிவான உரையை ஆற்றவுள்ளாரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .