Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஓகஸ்ட் 03 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதற்கு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சால்முதற்கட்டமாக 10 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத், இன்றுத் (03) தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, ஆலையடிவேம்பு, நாவிதன்வெளி, இறக்காமம், நாமலோயா, லாகுகல, பதியத்தலாவ, மஹாஓயா, உகண போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.
வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பௌஸர் மூலம் பிரதேச செயலகங்கள் ஊடாக குடிநீர் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவும் உதவி பணிப்பாளர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களின் தொகைக்கேற்ப பிரதேச செயலாளர்களின் கோரிக்கைக்கமைய நிதி வழங்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படின் மேலும் நிதியொதுக்கீடு செய்யப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
குடிநீர் விநியோகத்துக்கென அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, அம்பாறை மாவட்டத்துக்கு 4.4 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
19 minute ago
28 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
46 minute ago