2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

குப்பைகள் தரம்பிரிக்கப்பட்டன

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச சபையால் நாளாந்தம் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகளை தரம் பிரிப்பதற்குரிய வேலைத்திட்டம், இன்று (19) முன்னெடுக்கப்பட்டதாக, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.எம். பாயிஸ் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகளை உக்கக் கூடிய கழிவுகள் மற்றும் உக்காத கழிவுகள் என இரு வகைகளாக தரம் பிரித்து சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உக்கக் கூடிய கழிவுகளை இடுவதற்காக பச்சை நிறப் பைகளும், உக்காத கழிவுகளை இடுவதற்காக மஞ்சள் நிற பைகளும் அறிமுகம் செய்யப்பட்டு, அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, தீகவாபி ஆகிய பிரதேசங்களில் விநியோகித்து வருவதாகவும் அவர் கூறினார்.

வீட்டு உரிமையாளர் தங்கள் வீடுகளிலும், கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளிலும் சேகரிக்கின்ற திண்மக் கழிவுகளில் உக்கக் கூடியவை, உக்க முடியாதவற்றை வேறாக தரம்பிரித்து பிரதேச சபையின் வாகனங்களுக்கு கையளிக்க வேண்டும். அவ்வாறு தரம்பிரித்த திண்மக் கழிவுகளை மாத்திரமே பிரதேச சபை பாரம் எடுக்கும் என்பதை தெரிவிக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் முகமாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வரவதாகவும் அவர் கூறினார்.

தங்களது கழிவுகளை இடுவதற்காக தேவைப்படும் பைகளை, பிரதேச சபை ஊழியர்களிடமோ அல்லது பிரதேச சபையிடமோ பொதுமக்கள் பெற்றுக்கொள்ளவும் எனவும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .