Editorial / 2017 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எல்.எஸ்.டீன், எம்.எஸ்.எம். ஹனீபா
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளியொருவருக்கு, குருதி சுத்திகரிப்பு சிகிச்சை, நேற்றுக் காலை, முதன் முதலாக இடம்பெற்றதாக, அந்த வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள அனைத்து ஆதார வைத்தியசாலைகளிலும், குருதி சுத்திகரிப்பு சிகிச்சைக்கான இயந்திரத்தை நிறுவ வேண்டும் என்ற, ஜனாதிபதியின் திட்டத்துக்கு அமைவாக, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மேற்படி இயந்திரம் கிடைக்கப் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த இயந்திரத்தை, சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதாரப் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வழங்கியிருந்தார். கடந்த மாதமளவில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் குருதி சுத்திகரிப்பு பிரிவை, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் திறந்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலையின் அத்தியட்சகர் ஐ.எம். ஜவாஹிர், வைத்தியசாலையின் திட்டப் பிரிவுக்கான வைத்திய அதிகாரி எம்.எம். தாஸிம், குருதி சுத்திகரிப்புப் பிரிவுக்கான வைத்திய அதிகாரி எம்.ஏ.எம். முபாரிஸ் ஆகியோர், முதலாவது நோயாளிக்கான நேற்றைய குருதிச் சுத்திகரிப்பு சிகிச்சையின் பரீட்சார்த்த நடவடிக்கையை மேற்பார்வை செய்தனர்.
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026