2026 ஜனவரி 25, ஞாயிற்றுக்கிழமை

குற்றவாளிக்கு கடூழிய சிறை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 நவம்பர் 01 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் 4 வயதுச் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு  உட்படுத்திய குற்றச்சாட்டில், குற்றவாளியாக இனங்கானப்பட்ட நபரொருவருக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாறசிங்க, 11 வருட கடூழிய சிறைத் தண்டணையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 1 இலட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும் உத்தரவிட்டார்.

2014.02.25 அன்று பக்கத்துவீட்டு சிறுவனை தனது வீட்டுக்கு அழைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்குக்கு உட்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இவ்வழக்கு விசாரணை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்காளி சார்பில் அரச சட்டத்தரணி மலீக் அஸீஸ், மன்றில் ஆஜராகியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X