2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

குளங்களின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2017 ஓகஸ்ட் 30 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, அட்டாளைச்சேனை கமநல சேவைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள குளங்கள், எதிர்வரும் பெரும்போக நெற்செய்கைக்கு முன்னர்  புனரமைத்து நிறைவு செய்யப்படுமென, அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் ரீ.மயூரன் தெரிவித்தார்.

இது விடயமாக நேற்று (30) அவர் மேலும் தெரிவிக்கையில்,

“காலநிலை மாற்றத்துக்கான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், 10 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில், அட்டாளைச்சேனை படாரக்கல் குளம் மற்றும் கரடிக் குளம் என்பனவற்றின் புனரமைப்பு பணிகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

“அட்டாளைச்சேனை கமநல சேவைப் பிரிவிலுள்ள சுமார் 600 ஏக்கர் நெற்காணிகளுக்கு நீர்ப்பாசனம் வழங்கும் கரடிக் குளம், 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தின் போது சேதமடைந்தது.

“இவ்வாறு சேமடைந்த குளம் மிக நீண்டகாலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் இருந்து வந்ததால், அப்பிரதேச விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்திருந்தனர்.

“அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை, ஒலுவில் ஆகிய கமநல பிரிவுகளிலுள்ள சுமார் 250 ஏக்கர் நெற்காணிகளுக்கு பானச நீர் வழங்கும் படாரக்கல் குளப் புனரமைப்புப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .