2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கைதிகளுக்கு கைத்தொழில் பயிற்சிகள் வழங்க நடவடிக்கை

Editorial   / 2019 ஜூலை 09 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.எஸ்.எம்.ஹனீபா

  கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பது தொடர்பில்   பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை ஊடாக கைத்தொழில் பயிற்சிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவித்த, தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் தலைவர் நஸிர் அஹமட் , கைதிகளின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்கு உதவும் வகையில் இது பயன்பெறுமெனவும் தெரிவித்தார். 

    கைத்தொழில் பயிற்சிகளை   பூர்த்தி செய்தகைதிகளுக்கு அரச அங்கிகாரமுள்ள சான்றிதழ்களை வழங்கவும், எதிர்காலத்தில் இதன் மூலம் அவர்கள் சமூகத்தில் நற்பிரஜைகளாக வாழ்வதற்கான நடைமுறைகளை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும் சபையின் தலைவர் நஸிர் அஹமட், தெரிவித்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக சிறைச்சாலை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகவும் தெரிவித்த சபையின் தலைவர்,  கைத்தொழில் பயிற்சி அதிகார சபை தற்போது 16 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு பல்வேறு கைத்தொழில் பயிற்சிகளை வழங்கிவருவதுடன், தகவல் தொழில் நுட்பம் குறித்த புதிய பாட விதானங்களை அறிமுகம் செய்து அவற்றுக்கான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இந்த பயிற்சிகளைப் பூர்த்தி செய்பவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவர்கள் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நடவடிக்கை காரணமாக நாட்டின் அனைத்து பகுதிகளிலுமுள்ள வேலை வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகள் தமது வாழ்கை வளமேம்பாட்டுக்கான பயிற்சிகளை பெற்றுவருவதுடன் தொழில்துறை வாய்ப்புக்களையும் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X