Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
வி.சுகிர்தகுமார் / 2017 செப்டெம்பர் 22 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
“முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கடந்த கொடூர ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதில் மிகவும் முக்கிய பங்கு வகித்தவர். அவரின் செயற்பாடுகள் இன, மத மற்றும் மொழி வேறுபாடுகளின்றி அனைத்து மக்களையும் ஒற்றுமைப்படுத்துவதுடன், சமாதானத்தை நோக்கியதாக அமைந்துள்ளது” என்று, அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அம்பாறை மாவட்டத்துக்கான விஜயத்தையொட்டி, ஆலையடிவேம்பு பனங்காட்டுப்பிரதேசத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற, வாழ்வாதார உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு, அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“சகல சமூகங்களும் ஒற்றுமையுடனும் வாழவேண்டும் என்பதற்காகவே, சகல கட்சிகளையும் உள்ளடக்கியதான இந்த நல்லாட்சியையும், சந்திரிகா அம்மையார் உருவாக்கியுள்ளார். அவ்வாறான இந்த நல்லாட்சியின் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வுத்திட்டம் கிடைக்கும் என்பதில் எந்த ஜயப்பாடுமில்லை” என்றார்.
“அவரது ஆட்சிக்காலமானது, ஊழலற்ற சிறந்த ஆட்சிக்காலமாக அமைந்த போதிலும், அதன் பின் வந்த ஆட்சிக்காலம், ஊழல் நிறைந்த ஆட்சியாகவும் பல உயிர்களைப் பறித்த ஆட்சியாகவும் நடைபெற்றதையும் நான் இந்த வேளையில் ஞாபகமூட்ட விரும்புகின்றேன்.
“அந்த வகையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நலிவுற்ற மக்களை அவர் நேரடியாகப் பார்வையிட்டு, அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குவதுடன், எதிர்காலத்திலும் இவ்வாறான உதவிகளை வழங்கி, எமது மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதுடன், அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் மிகவும் குறைந்தளவு இடம்பெறுகின்ற கட்டுமானப் பணிகளையும் முன்னெடுக்க உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறேன்” எனவும் குறிப்பிட்டார்.
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago