2025 மே 02, வெள்ளிக்கிழமை

கொரோனா தொற்றுக்கு இதுவரை மூவர் மரணம்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ், எம்.எஸ்.எம்.ஹனீபா, சகா

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, கிழக்கு மாகாணத்தில் இதுவரை மூவர் மரணித்துள்ளனர் எனவும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 621  தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

“கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிழக்கு மாகாணத்தில் மரணமடைந்த மூவரும் கல்முனைப் பிராந்தியத்தைச்  சேர்ந்தவர்களாவர். சம்மாந்துறை, ஒலுவில் மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்” எனவும் அவர் தெரிவித்தார்.

“கல்முனைப் பிராந்தியத்தில் இதுவரை 9,871 பிசிஆர் பரிசோதனைகளும், 5,909 அன்ரிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இப்பிராந்தியத்தைச் சேர்ந்த 235 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அத்தோடு, 384 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

“கல்முனைப் பிராந்தியத்தில் உள்ள பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் தற்போது 88 பேரும், மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் 99 நோயாளர்களும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் தொற்றுக் காரணமாக அனுமதிக்கப்பட்டவர்களில் 242 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

“அக்கரைப்பற்று பிரதேசத்தில் 303 பேரும், கல்முனை தெற்கு பகுதியில் 87 பேரும், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயப் பிரிவில் 63 பேரும், பொத்துவில் பிரதேசத்தில் 38 பேரும், சாய்ந்தமருது பிரதேசத்தில் 28 பேரும், இறக்காமம் பிரதேசத்தில் 23 பேரும், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 22 பேரும், சம்பாந்துறை பிரதேசத்தில் 14 பேரும், திருக்கோவில் பிரதேசத்தில் 13 பேரும், கல்முனை வடக்குப் பகுதியல் 10 பேரும், காரைதீவில் 8 பேரும், நிந்தவூர் பிரதேசத்தில் 7 பேரும், நாவிதன்வெளி பிரதேசத்தில் மூவரும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது” என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X