2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொரோனா விழிப்புணர்வு; சைக்கிளில் பவனி சென்று நன்றி கூறிய மாணவர்கள்

Editorial   / 2022 ஜனவரி 11 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய தரப்பினருக்கு, அக்கரைப்பற்று 'பெப்பிள்ஸ்' கல்வியக மாணவர்கள் சைக்கிளில் பவனி சென்று இன்று (11) நன்றி தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் விதத்தில் அமைந்த இந்த மாணவர்களின் சைக்கிள் பவனி, அக்கரைப்பற்று 'பெப்பிள்ஸ்' கல்வியகத்தின் ஏற்பாட்டில், கல்வியக வளாகத்தில் இருந்து ஆரம்பமானது.

விழிப்புணர்வு வாசகங்கள் பொருத்தப்பட்ட சைக்கிள்களில் புறப்பட்ட மாணவர்கள், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் அயராது பாடுபட்ட அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம், மாநகர சபை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கு பவனியாகச் சென்று, தமது நன்றியைத் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று மாநகர சபைக்கு வருகை தந்த மாணவர்களை, மேயர் அதாவுல்லா அஹமட்சக்கி வரவேற்றார். அங்கு மாணவர்கள், மேயருக்கு நன்றி தெரிவித்ததுடன், நினைவுப் பரிசையும் வழங்கிவைத்தனர்.

மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய மேயர், 'கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சுகாதாரத் துறையினரும் ஏனைய அரச அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். அவர்களுக்கு யாரும் நன்றி சொல்லவில்லை. நீங்கள் வந்திருப்பது நல்லதொரு முன்மாதிரியாகும்' என்றார்.

பெப்பிள்ஸ் கல்வியகத்தின் பிரதானி எஸ்.இன்ஸாப், ஆசிரியர்கள் மற்றும் துறைசார்ந்தவர்களும் மேற்படி சைக்கிள் பவனியில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .