2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கொவிட் 19 பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிவைப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

கொவிட் -19 இல் இருந்து முன்பள்ளி சிறார்களைப் பாதுகாக்கும் நோக்குடன், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி பிரிவால் முன்பள்ளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு, மகளிர் விவகாரம், சிறுவர், சமூக பாதுகாப்பு அமைச்சால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற திட்டத்தின் ஊடாக, முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.கரீமா தலைமையில் நடைபெற்றது.

உலக வங்கியின் நிதி உதவியுடன்,  முன்பிள்ளை பருவ அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இதன்படி, அக்கரைப்பற்று பிரதேச செயலகத்துக்குள் இயங்கும் தெரிவுசெய்யப்பட்ட 14 முன்பள்ளிகளுக்கு கொவிட் 19 பாதுகாப்பு உபகரணங்களான வெப்பநிலை அளவிடும் கருவி, கை கழுவும் உபகரணத் தொகுதிகள் ஆகியன வழக்கப்பட்டன.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம் ஆகியோர் கலந்துகொண்டு, இவற்றை வழங்கினர்.

நிகழ்வில் உளவள ஆலோசகர் ஆப்தீன், பிரிவின் ஏனைய  உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசிரியைகள், நிர்வாகிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .