2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொவிட் சிகிச்சையிலிருந்து இரு வைத்தியசாலைகள் விடுவிப்பு

Editorial   / 2022 ஜனவரி 03 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா, ஏ.எல்.எம்.ஷினாஸ், பி.எம்.எம்.ஏ.காதர், றாசிக் நபாயிஸ்

கல்முனைப்பிராந்தியத்தில் கொவிட் சிகிச்சையளித்து வந்த இரு வைத்தியசாலைகள் புத்தாண்டுமுதல் விடுவிக்கப்பட்டு, தமது வழமையான மக்கள் சுகாதார பராமரிப்புச் சேவையை தொடங்கியுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.

இதன்படி, பாலமுனை வைத்தியசாலை மற்றும் மருதமுனை வைத்தியசாலை என்பனவே கொவிட் சிகிச்சையளிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒன்றரை வருட காலமாக இவ்வைத்தியசாலைகள், அம்பாறை மாவட்டத்துக்கு மாத்திரம் இல்லாமல், நாட்டின் பல பாகங்களிலுமிருந்து வந்த ஆண், பெண் என இரு பாலாருக்கும் சிறந்த கொவிட் உளவள சேவையை செய்துவந்திருந்தது.

இந்நிலையில், தற்போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்துக்குட்பட்ட  பகுதிகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைவடைந்து, சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து இவ்வைத்தியசாலையின் பொதுமக்கள் சேவைகளை மீள ஆரம்பித்து வைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .