2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கோணாவத்தை ஆற்று பகுதி அபகரிப்பு: வேலி, மணல் அகற்றப்படும்

Niroshini   / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே எ ஹமீட்

அட்டாளைச்சேனை - கோணாவத்தை ஆற்றையும் அதன் கரைகளை அண்டிய பகுதிகளையும் சட்டவிரோதமாக அபகரிக்கும் முகமாக சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள வேலி, அங்குகொட்டப்பட்டுள்ள மண் ஆகியவற்றை, நாளை (15) அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோணாவத்தை ஆற்றையும் அதன் கரைகளை அண்டிய பகுதிகளையும் சட்டவிரோதமாக அபகரிக்கும் முகமாக, நபரொருவர், மணலிட்டு நிரப்பி, வேலியடைத்துள்ளார்.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை தவிசாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர், இன்று (14) காலை அப்பகுதிக்கு திடீர் விஜயதொன்றை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த இடத்தை சட்டவிரோதமாக நிரப்பியவர் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கும், வழக்குத் தொடர்வதற்கும் கரையோர பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களங்களின் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்..

இதேவேளை, அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வேலி மற்றும் அங்குகொட்டப்பட்டுள்ள மண் ஆகியவற்றை அங்கிருந்து, வியாழக்கிழமை (இன்று) அகற்றவுள்ளதாக, பிரதேச சபைத் தவிசாளர் உறுதியளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X