2025 மே 03, சனிக்கிழமை

கோமாரியிலும் புழுத் தாக்கம்

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோமாரி மற்றும் மணல்சேனை பகுதிகளில் செய்கைப் பண்ணப்பட்டுள்ள சோளம் பயிர்கள் படைப்புழு தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கோமாரி விவசாய விரிவாக்கல் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 40 ஹெக்டயர் நிலப்பரப்பில் சோளம் செய்யை பண்ணப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 50 சதவீதத்துக்கு மேலாக படைப்புழுத் தாக்கம் ஏற்பட்டுள்ளதை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

2018ஆம் ஆண்டும் கோமாரி, பொத்துவில் பிரதேசங்களில் ஏற்பட்ட படைப்புழுத் தாக்கத்தால் 2019ஆம் ஆண்டு சோளம் செய்கை மேற்கொள்ள முடியாதளவு பொருளாதார ரீதியாகப் பாதித்திருந்த நிலையில், இம்முறை சோளம் செய்கை மேற்கொண்டிருந்த நிலையில் மீண்டும் இந்தப் படைப்பூழு தாக்கம் ஏற்பட்டிருப்பதானது தமக்கு பெரும் ஏமாற்றத்தையும் பொருளாதாரப் பின்னடைவையும் ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X