2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சுகாதாரப் பரிசோதகரின் கடமையைச் செய்யவிடாது தடுத்தவர் கைது

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

நிந்தவூரில்; பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவரின்;; கடமையைச் செய்யவிடாது தடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று (31) கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மாந்தோட்டச் சந்தியில் சிறிய லொறிகளில் மீன் விற்பனை செய்து கொண்டிருந்தபோது, அவ்விடத்துக்குச் சென்ற பொதுச் சுகாதாரப் பரிசோதகர் இவ்விடம் மீன் விற்பதற்கு பொருத்தமானது இல்லை என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதனை அடுத்து, மீன் விற்பனையில் ஈடுபட்டோர், அவரின் கடமையைச் செய்ய விடாது தடுத்ததுடன், தாக்குவதற்கும் முற்பட்டனர்.  

இது தொடர்பாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனை அடுத்து, மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .