2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

சுத்தமான குடிநீருக்காக சிரமம்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றியாஸ் ஆதம்

அம்பாறை, நாவிதன்வெளிப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அண்ணாமலை -2, 3 நாவிதன்வெளி -2, வீரச்சோலை -2 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் வாழ்கின்ற மக்கள் சுத்தமான குடிநீரைப் பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

ஆகவே, மேற்படி பிரிவுகளிலுள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், மாவட்டச் செயலகத்தில்  இன்று புதன்கிழமை நடைபெற்றது.
மேலும், மேற்படி பிரிவுகளில்; நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீரவிநியோகத் திட்டம் முன்னெடுக்கப்படவில்லை. மேற்படி மக்களின் நன்மை கருதி நீர்வியோகத் திட்டத்தை முன்னெடுக்குமாறும் அவர்  கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் கவனத்திற்கொண்டு மேற்படி கிராம அலுவலர் பிரிவுகளில் நீர்விநியோகத் திட்டத்தை மேற்கொள்வதாக அக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X