Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எல். அப்துல் அஸீஸ்,ஐ.ஏ.ஸிறாஜ்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 'தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு 2015' எனும் தலைப்பில் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இளைஞர்கள் மாநாடும் இளைஞர்கள் கெளரவிப்பு நிகழ்வும் சனிக்கிழமை(31) சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை (28) கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தலைமையில் அவரின் கல்முனை அலுவலகத்தில் நடைபெற்றது.
இங்கு கருத்து தெரிவித்த அவர்,
மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் நமது சமூகத்துக்கு ஆற்றிய அளப்பெரிய சேவைகள் மற்றும் அவர் காட்டிய வழிகள் முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமைத்துவத்தை பெற்றுத்தந்தமை போன்ற விடயங்கள் இப்போதைய இளைய சமூதாயத்துக்கு புரியவைக்கப்படவேண்டியுள்ளது.
இதேவேளை, அப்போதைய இளைஞர் சமுதாயத்துக்கு இருந்த சமூக உணர்வுகள் இப்போதைய இளைஞர்களிடம் அருகிவரும் இவ்வேளையில், அவர்களை ஒன்றிணைத்து சமூக உணர்வுக்குள்ளும் எதிர்கால சமூகத்தை வழிநடத்தக் கூடியவர்களாகவும் ஆக்கிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டதே இந்த மாபெரும் இளைஞர் மாநாடாகும் என்றார்.
இதில்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நகரங்கள் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர், பிரதி அமைச்சர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைஷால் காசீம், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் மற்றும் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது,கல்வி, கலை, கலாசாரம் மற்றும் சாதனைகள் புரிதல் போன்ற துறைசார்ந்த இளைஞர்கள் அஷ்ரப் ஞபகார்த்த நினைவுச் சின்னங்கள், சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago