2025 ஜூலை 05, சனிக்கிழமை

சக்கரகதிரைகளும் விழித்திரை வில்லையும் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2015 நவம்பர் 04 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நோயுற்ற முதியோர் இருவருக்கு தலா ஒவ்வொரு சக்கரகதிரையும் பார்வை குன்றிய ஒருவருக்கு விழி வில்லையும் வழங்கி வைக்கப்பட்டதாக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தெரிவித்தார்.

இந்நிகழ்வு, ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் இன்று புதன்கிழமை (04) இடம்பெற்றது.

ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட மூன்று முதியோருக்கே இவை வழங்கி வைக்கப்பட்டன. 

இந்நிகழ்வில் ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஷா உட்பட சமூக சேவை உத்தியோகத்தர்களும் கிராம சேவையாளர்களும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .