2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘சகோதர சங்கமம்’

வி.சுகிர்தகுமார்   / 2017 நவம்பர் 13 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மூவின மக்களையும் ஒன்றினைக்கும் 'சகோதர சங்கமம்' நிகழ்வு, அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி அதிகாரி அலுவலகத்தில் நாளை (14) காலை நடைபெறவுள்ளது.

திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி என்.புள்ளநாயகம் வழிநடத்தலின் கீழ், கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.இராசமாணிக்கம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் நடைபெறும் இந்நிகழ்வில், மூவின மக்களுடைய எதிர்கால நட்புறவை மையமாகக் கொண்ட கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .