Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 ஒக்டோபர் 26 , பி.ப. 01:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை - ஆலையடிவேம்பு பிரதேசத்தில் போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறி மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவருக்கு, 32 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி நேற்று செவ்வாய்க்கிழமை (25) தீர்ப்பளித்தார்.
கடந்த வாரம் அக்கரைப்பற்று பொலிஸாரால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
மது போதை, சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமை, தலைக்கவசம் அணியாமை உள்ளிட்ட 10 குற்றச்சாட்டுகள் இவருக்கெதிராக அக்கரைப்பற்று பொலிஸாரால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவ்வழக்கு விசாரணை, நேற்று (25) அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும், நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 May 2025
17 May 2025