2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

Niroshini   / 2015 நவம்பர் 18 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் தீர்வை செலுத்தப்படாமல் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட (டொப் )என்ற பெயருடைய சட்ட விரோத சிகரெட்டுக்கள் 65 பண்டலை  அக்கரைப்பற்று பொலிஸார் முச்சக்கர வண்டி ஒன்றிலிருந்து   இன்று புதன்கிழமை மாலை மீட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார்  முச்சக்கர வண்டி ஒன்றுக்குள் இருந்து சிகரெட்டுக்களை கைப்பற்றியதுடன் முச்சக்கர வண்டி சாரதியையும் கைது செய்துள்ளதுடன் முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் அட்டாளைச்சேனை,6ஆம் பிரிவைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் குடும்பஸ்தராவார்.

சிகரெட்டுக்கள் அட்டாளைச்சேனை -8 ஆம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .