Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் 90சதவீதமான சட்டவிரோதமாக மதுபான விற்பனைகள் ஒழிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ்.சமந்த தெரிவித்தார்.
திருக்கோவில்-04 காயத்திரி கிராமத்தில் நேற்று சனிக்கிழமை (03) இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இப்பிரதேசத்தில் உள்ள கிராம மட்ட சிவில் பாதுகாப்பு குழுக்களின் ஒத்துழைப்புடன் எமது பொலிஸ் நிலையத்தினால் சட்டவிரோத மதுபான விற்பனைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, தற்போது முச்சக்கரவண்டி சாரதிகள் சிலர் பாடசாலை மாணவிகளை தொந்தரவு செய்வதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.இது தொடர்பாகவும் நாம் கூடிய கவனம் எடுத்து வருவதுடன் சிறுவர்களின் பாதுகாப்பில் கூடிய கரிசனைகளை எடுத்து வருகின்றோம் என்றார்.
மேலும்,இப்பிரதேச மக்கள் எந்தவித அச்சமும் இல்லாது திருக்கோவில் பொலிஸில் வந்து தமது முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்.
இவ்வாறு முறைப்பாடு வழங்குவதன் மூலம் இப்பிரதேசத்தில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்களை தடுக்க முடியும்.
இதற்கான சகல நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொள்ள தயாராக இருக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .