2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சட்டவிரோதமாக ஆற்றுமண் ஏற்றிய 9 பேர் கைது

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 செப்டெம்பர் 15 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, சம்மாந்துறை நெய்னாகாடு பிரதேசத்தில் அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி சட்டவிரோதமாக ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் 09 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் உபுல் பியலால் இன்று (15) தெரிவித்தார்.

மேற்படி நபர்கள், நேற்று (14) கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் மணல் ஏற்றுவதற்குப் பயன்படுத்திய 09 பெரிய ரக லொறி கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

நெய்நாகாடு, பள்ளாறு, மற்றம் நிந்தவூர் ஆகிய பிரதேச ஆறுகளில் சட்டவிரோதமாக ஆற்று மண் ஏற்றி வருவதால் நீர்ப்பாசன அணைக்கட்டுகள் சேதமடைவதோடு, இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .