Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2019 ஜூலை 10 , பி.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
பொலிஸார் அல்லது பாதுகாப்பு தரப்பினர் சந்தேக நபர்களை கைதுசெய்யும் போது மனித உரிமைகளை அப்பட்டமாக மீறுகின்றனரென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸடீன் குற்றம் சாட்டியதுடன் சந்தேக நபர்களை கைது செய்யும் போது பொலிஸார், மனித உரிமைகள் பாதிக்கப்படாதவாறு கைது செய்யவேண்டுமெனவும் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸடீன் தெரிவித்தார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகம் ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் -தமிழ் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு அமைய மதத் தலைவர்கள், மௌலவிமார், மார்க்க அறிஞர்கள் மற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இடையிலான நல்லிணக்க விசேட விழிப்புணர்வு கலந்துரையாடலும் செயலமர்வும் நேற்றுமுன்தினம் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்றது .
இங்கு தலைமைதாங்கி உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றும் போது, : நாம் மனித உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும். நாட்டுப்பற்று அல்லது தேசப்பற்று என்பதை பிழையாக விளங்கிக் கொண்டு, சிலர் இனவாத கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
மறுபக்கம் அப்பாவிப் பொதுமக்கள் வீணாக கைதுசெய்யப்படுகின்றனர். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் அண்மைய காலங்களில் கல்முனை பிராந்தியத்திலும் கூட 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். யாருக்கும் அறிவிக்கப்படவில்லை. உறவினர்களுக்கு கைது செய்யப்பட்டவர்கள் எங்கே? இருக்கிறார்கள் என்பது கூட தெரியப்படுத்தப்படவில்லை.
கைதுசெய்யும் போது பொலிஸார் ஏன்? கைது செய்கிறோம் என்பதை உறவினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கைது செய்யவருபவர்கள் யார்? ஏன்பதையும் தெரியப்படுத்த வேண்டும். கைது செய்யப்பட்டவர் எங்கே இருக்கிறார்? என்பதையும் உறவினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இந்த நிகழ்வில் மதத்தலைவர்கள், பள்ளிவாசல் நிருவாகத்தினர், மார்க்க அறிஞர்கள், மௌலவிமார், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
38 minute ago
1 hours ago
2 hours ago