2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சனசமூக நிலையம், சிறுவர் பூங்காவை புனரமைக்குமாறு கோரிக்கை

Editorial   / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியாஸ் ஆதம்

அட்டாளைச்சேனை, மீலாத் நகரில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள சனசமூக நிலையத்தையும் சிறுவர் பூங்காவையும், மீளவும் புனரமைத்துத் தறுமாறு, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அட்டாளைச்சேனை மீலாத்நகரில், 1997 இல் மீலாத் விழாவின் நிமிர்த்தம் இந்த சனசமூக நிலையமும் சிறுவர் பூங்காவும் நிர்மாணிக்கப்பட்டு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபினால் திறந்துவைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது.

தற்போது, பல வருடங்களாக இவை பராமரிப்பற்று பாம்புப் புற்றுகளும் புற்பூண்டுகளும் வளர்ந்து, கால்நடைகள் தங்குகின்ற தலமாகவும், தீய செயற்பாடுகள் நடைபெறுகின்ற இடமாகவும் காணப்படுவதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது விடயமாக, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளரின் கவனத்துக்குப் பலமுறை தெரிவித்திருந்தும் இதுவரையும் எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

எனவே, இது தொடர்பாக அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் கவனமெடுத்து மீளவும் புனரமைத்து, மக்கள் பாவனைக்கு வழங்குமாறு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .