2025 மே 05, திங்கட்கிழமை

சபாநகர் கிராமத்தில் சட்டவிரோத பண்ணைகள்

Editorial   / 2019 ஜனவரி 17 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்காமம் சபாநகர் பகுதியில்  மக்கள் குடியிருப்புகளை அண்மித்து, சட்டவிரோதமான முறையில் பண்ணைகள் அமைக்கப்படுவதால்  அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக, அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

இது தொடர்பில் சபாநகர் கிராமஅபிவிருத்திச் சங்கச் செயலாளர் ஏ.ஆர். பைசால் குறிப்பிடுகையில், பண்ணைகளில் இருந்துவெளியாகும் துர்நாற்றம், புகை, ஈ பரவுதல் மற்றும் ஏனைய கழிவுகளால் எதிர்காலத்தில் கிராமமக்கள் தொற்றுநோய்களுக்கும், சுவாசநோய்களுக்கும் ஆளாகும் நிலைமை அதிகம் இருப்பதாகவும்  சுட்டிக்காட்டினார்.

பண்ணையாளர்களுக்கு அனுமதிப்பதிரம் வழங்குவதைத் தடை செய்யுமாறு சம்மந்தப்பட்ட தரப்பினர்களுக்குக் கடிதம் மூலம் அறிவித்திருந்தும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X